search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பளுதூக்குதல் போட்டி"

    • தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
    • 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஆதித்யா தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். உடற்பயிற்சியின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று வருகிறார் .

    இந்நிலையில் பளுதூக்குதலில் ஏற்கனவே கோவையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 135 கிலோ பளு தூக்கி நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் 140 கிலோ பளு தூக்கி அதனை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்கு அனுப்பி உள்ளார் .அது அங்கீகாரம் பெற்று இன்று கோவையில் நடைபெறும் விழாவில் அங்கீகார சான்றிதழ் பெற உள்ளார்.

    இந்நிலையில் தன்னுடைய 140 கிலோ சாதனையை முறியடிக்கும் வகையில் இன்று 150 கிலோ எடையுள்ள பளுதூக்கி தன்னுடைய சாதனையை தானே முறியடிதுள்ளார். இதனையும் உலக சாதனை அங்கீகாரம் பெற அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு காயத்திலிருந்து மீண்டு தாய்லாந்தில் நடந்த போட்டி ஒன்றில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். #EGATCup #MirabaiChanu
    இந்திய பளுதூக்கும் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு (24). மணிப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2017ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர். கோல்டு கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்து கொண்டு 196 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார்.

    காயத்தினால் அவதிப்பட்ட அவர் கடந்த 9 மாதமாக எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. தொடர் சிகிச்சைக்கு பின் அவர் காயத்திலிருந்து மீண்டார்.

    இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் நடந்த ஈ.ஜி.ஏ.டி. கோப்பைக்கான பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு கலந்து கொண்டார்.

    இதில், 49 கிலோ எடை பிரிவில் சானு மொத்தம் 192 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பானின் மியாகே ஹிரோமி (183 கிலோ) வெள்ளிப்பதக்கமும், பப்புவா நியூ கினியாவின் லாவோ டிக்கா தவுவா (179 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர். #EGATCup #MirabaiChanu
    ×